கவர்ச்சியான கால்கள் இருப்பதாகக் கூறி சவால் விட்டுள்ள சுப்ரா

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஜோடியாக ‘சகாப்தம்’ படத்தில் நடிக்கும் சுப்ரா அய்யப்பா, தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார். 
வருடாந்திர காலண்டர் வெளியிடும் மதுபான நிறுவனம் ஒன்றிற்கு அவர் படுகவர்ச்சியாக காட்சி அளித்துள்ளார். 
சுமார் 6 அடி உயரமுள்ள சுப்ரா அந்தப் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட துடன் அருகில் கருத்து களையும் பகிர்ந்துள்ளார்.
“எனது உயரமான, கவர்ச்சியான கால்களைப் போல் இந்த நாட்டில் வேறு எந்த நடிகைக்காவது இருக் கிறதா? பார்த்திருந்தால் சொல்லுங்கள், அதைத் தெரிந்துகொள்ள நான் காத்திருக்கிறேன்,” என சவால் விடுத்திருப்பதுடன், “என்னுடைய அழகான கால்களுக்கு ரசிகர்களே நீங்கள் ஜாலியாக ஒரு ஹலோ சொல்லுங்களேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார். 
இதற்கு கருத்து பகிர்ந்துள்ள ரசிகர்களில் ஒருவர், “உங்களின் ஒவ் வொரு கால்களுக்குமான கவர்ச்சிக்கு மணிக்கு ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால்கூட ஈடுகொடுக்க முடியாது,” என ஜாலியாகப் பதிவிட்டுள்ளார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்