தனுசுடன் ஜோடி போடும் மலையாள மஞ்சு வாரியார்

‘அசுரன்’ படத்தில் தனு ‌ஷின் ஜோடியாக மலை யாளப் பெண் சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியார் நடிப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. 
‘வடசென்னை’ படத் தைத் தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘அசுரன்’. கலைப்புலி எஸ்.தாணு இப் படத்தைத் தயாரிக்கிறார். 
இப்படத்தின் முதல் கட்ட சுவரொட்டி அண்மை யில் வெளியிடப்பட்டது. நாளை மறுநாள் 26ஆம் தேதி இப்படத்தின் படப் பிடிப்பு தொடங்குகிறது. 
ஜி.வி.பிரகாஷ் இசை யில் உருவாகும் 71வது படம் இது என்பதோடு வெற்றிமாறன், தனு‌ஷுடன் தலா 4வது முறையாகவும் கூட்டணி அமைத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். 
நடிகர் திலீப்பைத் திரு மணம் செய்துகொண்டு படங்களில் நடிப்பதைத் தவிர்த்த மஞ்சு வாரியார், தற்போது கணவரை விவா கரத்து செய்துவிட்டார். இதனால் மலையாளப் படங்களில் மீண்டும் நடிக் கத் தொடங்கியுள்ளார். தமிழில் ‘அசுரன்’ அவரது முதல் படமாகும். 
தனுஷைவிட ஐந்து வயது மூத்தவரான மஞ்சு வாரியார் ‘அசுரன்’ படத் தில் தனு‌ஷுக்கு ஜோடி யாக நடித்தால் ஒத்து வருமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந் துள்ளது. 
இருப்பினும் விரைவில் மஞ்சு வாரியாரின் கதா பாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.