‘நான் வளர்க்கும் நாய்க்குட்டி என் மன உளைச்சலைக் குறைக்கிறது’

சினிமா படப்பிடிப்பில் எப்படி இருக்கின்றேனோ அதேபோல்தான் வீட்டிலும் துறுதுறுவென்று இருப் பேன். எனக்கு சும்மாவே ஓரிடத்தில் முடங்கி இருக்கப் பிடிக்காது.
ஏதாவது ஒரு வேலையில் என்னை எப்போதும் ஈடுபடுத்திக்கொண்டு பரபரப்பாகவே இருப்பேன் என்று கூறியுள்ளார் நிக்கி கல்ராணி.
“என் வீட்டில் ஒரு நாய்க் குட்டியை  வளர்த்து வருகிறேன். அதனுடன் விளையாடுவதுதான் என் முக்கிய பொழுதுபோக்கு. அது மன உளைச்சலைப் பெரிதும் போக்க உதவுகிறது. 
“இதுதவிர சமையலிலும் எனக்கு ஆர்வம் அதிகம். நண்பர்கள் வீட்டுக்கு வந்தால், அவர் களுடன்  சேர்ந்து சமைப்பேன். 
“பொங்கல் திருநாளின்போது வீட்டில் வெண்பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும் என் கையால் செய்து அனைவருக்கும் பரிமாறி னேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டில் இருக்கவே அதிகம் விரும்புவேன்.
“சார்லி சாப்ளின் 2’ படத்தில் ஒப்பந்தமானதும் முதல்  வேலை யாக ‘சார்லி சாப்ளின்’ முதல் பாகத்தைப் பார்த்தேன். சிறந்த வெற்றி பெற்ற இந்தப் படம் ஆறு மொழிகளில் மறுபதிப்பு செய்யப் பட்டதாகவும் அறிந்தேன்.  இப் போது எடுக்கப்படும் ‘சார்லி சாப்ளின் 2’ படம் ‘சார்லி சாப்ளின்’ படத்தின் தொடர்ச்சி அல்ல. இது முழுக்க முழுக்க வித்தியாசமான  கதைக்களத்தைக் கொண்டது. 
“குடும்பத்தினரோடு அனை வரும் வந்து படத்தைப் பார்த்து ரசித்துச் சிரிக்கலாம்,” என்று கூறி யுள்ளார் நிக்கி கல்ராணி.