கார்த்திக் சுப்புராஜ்: சிலருக்கு இதுவே பிழைப்பாகிவிட்டது

எந்தப் படத்தின் வசூல் அதிகம் என்பதன் தொடர்பில் ரஜினி, அஜித் ரசிகர்கள் மத்தியில் நடந்த விவாதம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
பொங்கலுக்கு வெளியான ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ இரண்டு படங்களுக்குமே வசூல், விமர்சன ரீதியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது. இரு படங்களுமே வசூல் ரீதியில் சக்கைப்போடு போட்டு வருகின்றன.
இந்நிலையில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பட வசூல், ‘பேட்ட’யை முந்திவிட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து தமிழகத்தில் மட்டுமே ‘விஸ்வாசம்’ அதிக வசூல் கண்டதாகவும் வெளிநாடுகளைப் பொறுத்தவரை ‘பேட்ட’க்குதான் நல்ல வசூல் என்றும் இருதரப்பிலும் தொடர்ந்து கூறப்பட்டது.
இந்நிலையில் திரைப்படங்களின் வசூலை வைத்துப் பேசுவது, வாதி டுவது தேவையற்ற ஒன்று என ‘பேட்ட’ இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். ஒருசிலருக்கு இவ்வாறு பேசுவதே பிழைப்பாகிவிட்டது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
“எந்த உணவகத்திலாவது இன்று ஆயிரம் இட்லி விற்கப்பட்டதாக வெளியே அறிவிப்புப்பலகை வைத்துள் ளனரா? இல்லையே! உணவு நன்றாக இருக்கிறதா, இல்லையா? என்பதை மட்டுமே கவனிப்போம்.
“அது போன்றுதான் திரைப் படங்களும். படம் பிடித்திருக்கிறதா இல்லையா? என்று பார்க்க வேண்டும். நல்ல விமர்சனங்கள் வந்தால் நாமும் படத்தைப் பார்க்கிறோம். 
“ஆனால் வசூலை வைத்துப் பேசு வதெல்லாம் சிலருக்குத் தொழிலாகி விட்டது. இத்தகைய தகவல்களை வெளியிட்டு ஒருசிலர் சம்பாதிக்கிறார் கள்,” என்று கார்த்திக் சுப்புராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, படம் வெளியாகி இரு வாரங்களாகிவிட்ட நிலையில், ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ ஆகிய இரண் டும் வசூலில் அசத்திக்கொண்டிருக் கின்றன.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பல விநியோகிப்பாளர்களுக்கு கொழுத்த லாபம் கிடைத்திருப்பதாகத் தகவல்.