பிப்ரவரி முதல் தேதி வெளியாகிறது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’    

சிம்பு நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்துக்கு தணிக்கைக் குழுவினர் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது. இப்படத்தில் கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ் என இரண்டு நாயகிகள் உள்ளனர். சில சர்ச்சைகள் காரணமாக தமிழ்த் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. இதனால் இப்படத்தின் வெளியீட்டுக்காக சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் ‘யு’ சான்றிதழுடன் பிப்ரவரி முதல் தேதி வெளியாகும் என லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.