‘அதிர்ஷ்டமும் வேண்டும்’

கடினமாக உழைப்பதுடன் அதிர்ஷ்டமும் இருந்தால்தான் திரையுலகில் பிரகா சிக்க முடியும் என்கிறார் இசையமைப் பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ். இவரது நடிப்பில் ‘சர்வம் தாளமயம்’ படம் உருவாகி உள்ளது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜீவ் மேனன் இப்படத்தை இயக்கி உள்ளார். இவரும் இயக்குநர் பாலாவும்தான் தனது ஆசான்கள் என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
“நல்ல கதையை எப்படி அடையாளம் காண்கிறீர்கள் என்று பலரும் கேட்கி றார்கள். எனக்கு இந்த விஷயத்தில் இதுவரை பிரச்சினை இருந்த தில்லை. 
“நான் நிறைய அறிமுக இயக்குநர் களின் படங்க ளுக்கு இசை அமைத்துள்ளேன். ‘பொல்லாதவன்’, ‘ராஜா ராணி’, ‘காக்கா முட்டை’, ‘ஓரம் போ’ எனப் பல படங்கள் என் இசையில் வெளி வந்துள்ளன. 
எனவே, ஒரு வர் நம்மிடம் கதை சொல்லும் போதே அதில் உள்ள சாதக பாதக விஷயங் களை என்னால் அடையாளம் காண முடியும். 
“ஏனெனில் நான் தற்போது குறிப்பிட்ட நான்கு படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்புப் பெற்றவை,” என் கிறார் ஜி.வி.பிரகாஷ்.
இசையமைப்பாளராக மட்டுமே பணியாற்றியபோது தாம் படங் களை வேறு விதத்தில் தேர்வு செய்ததாகக் குறிப்பிடும் அவர், ஒரு படத்தின் கதைக்கருவை மனதிற்கொண்டே அதற்கு இசையமைப்பது குறித்து முடிவு செய்வதாகச் சொல்கிறார். 
தற்போது, நடிகரான பிறகு பொழுதுபோக்கு என்ற அம்சத்தை மட்டுமே முதன்மைப்படுத்தி படங்களைத் தேர்வு செய்கிறாராம்.
“நடிக்க வந்துவிட்டால் உங்கள் வேலையை இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண் டும் என்று பலரும் பேச ஆரம்பித்தனர். அப் போதுதான் பாலா பட வாய்ப்பு வந்தது. இப்போது ராஜீவ் மேனன் படம். இவர்கள் இருவருமே எனது ஆசான்கள் என்று சொல்லலாம்.