ஜி.வி. நம்பிக்கை: தாமதமாக வந்தாலும் வெற்றி பெறுவோம்

ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே இணைந்து நடிக்கும் படம் ‘100% காதல்’. படப்பிடிப்பு எப்போதோ முடிந்துவிட்டது என்றாலும், படம் மட்டும் இன்னும் வெளியான பாடில்லை. தெலுங்கில் நாக சைதன்யா நடித்து பெரும் வெற்றி பெற்ற படத்தை தமிழில் மறுபதிப்பு செய்துள்ளனர். ஒளிப்பதிவாளராக நல்ல பெயர் எடுத்த சந்திரமௌலி மறுபதிப்பை இயக்கி உள்ளார். நாசர், யோகி பாபு, தலைவாசல் விஜய், ஜெயசித்ரா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கிடையே வசந்தபாலன் இயக்கத்தில் நடித்துள்ள ‘ஜெயில்’, ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்களின் வெளியீட்டை ஜி.வி.பிரகாஷ் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார். அடுத்தகட்டமாக இளம் இயக்குநர்களின் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் ஜி.வி. முதலில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மிகவும் ஜாலியான கதை, கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தாமதமாக வெளிவந்தாலும், ‘100% காதல்’ நிச்சயம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும். அதற்கேற்ற அனைத்து அம்சங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளன,” என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும் வேறு யாருடன் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அமலா பால்.

20 Jul 2019

மறுமணத்திற்குத் தயாராகும் அமலா பால்