'என் பாட்டிக்காக வாய்ப்புக் கேட்கவில்லை'

'என் பாட்டிக்காக வாய்ப்புக் கேட்கவில்லை'

1 mins read
63b4561d-7b68-42e2-a0b9-325d2d414232
-

தனக்கோ, தன்னுடைய பாட்டிக்கோ வாய்ப்புத் தருமாறு கேட்டு யாரையும் தாம் அணுகியதில்லை என்கிறார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தியின் அம்மா மேனகா மட்டுமல்ல அவரது பாட்டியும் ஒரு நடிகைதான். தொடக்க காலத்தில் சில படங்களில் நடித்ததோடு ஒதுங்கிவிட்ட அவரை 80 வயதில் மீண்டும் நடிக்க அழைத்துள்ளனர். 'ரெமோ', 'கடைக்குட்டி சிங்கம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர் 'தாதா 87' படத்தில் கதை நாயகியாகவும் தோன்றுகிறார். இந்நிலையில் தன் பாட்டிக்காக வாய்ப்புக் கேட்டு பல இயக்குநர்களை கீர்த்தி அணுகியதாகத் தகவல் வெளியானது. இதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இத்தகவல் வெறும் வதந்தி என்றும், யாரிடமும் வாய்ப்புக் கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள கீர்த்தி, வாய்ப்புக் கேட்டு நடிக்குமளவுக்குத் தனது பாட்டி ஒன்றும் தொழில் ரீதியிலான முழுமையான நடிகை அல்ல என்று விளக்கமளித்துள்ளார். அவரது குடும்பத்தாரும் இதே விளக்கத்தை தந்துள்ளனர்.