காவல்துறை உங்கள் நண்பன்

அண்மைக் காலமாகக் காவல் துறையின் சேவையைப் பாராட்டும் வகையில் எடுக்கப்படும் படங் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
அந்தப் பட்டியலில் இணைந்தி ருக்கும் புதிய படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’. இதை ஆர்பிஎம் இயக்குகிறார். 
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுரேஷ் ரவி நாயகனாகவும், பின்னணிக் குரல் கலைஞர் ரவீணாவும் ஜோடி யாக நடிக்கின்றனர். 
சுரேஷ் ரவி இதற்கு முன்பு ‘மோ’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமா னார். ரவீணாவுக்கும் ‘கிடாயின் கருணை மனு’ படத்தில் நடித்த அனுபவம் உள்ளது. 
இன்றைய நவீன யுகத்தில் நாம் உண்ணும் உணவைக் கூட தபால் சேவை போல் ஒருவர் நேரில் கொண்டு வந்து ஒப்ப டைப்பது வழக்கமாகி விட்டது. 
அத்தகைய பொருட்களை ஒப் படைக்கும் பணியாளர்களுக்கும் காவல்துறைக்கும் இடையேயான உறவு குறித்து அலசுகிறதாம் இப்படம். 
அனைத்துக் காட்சிகளுமே எதார்த்த நிலையை மீறாத, மறைக்காத வகையில் இருக்கும் என்கிறார் இயக்குநர் ஆர்பிஎம். இப்படத்துக்கு ஆதித்யா, சூர்யா இரட்டை இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். 
‘ராணி தேனி’ என்று தொடங்கும் பாடலை ஹரிசரண் பாடியுள்ளார். இந்தப் பாடல் இளையர்களைக் கவரும் வகையில் இருக்குமாம். 
தற்போது இப்படத்தின் படப் பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.