மலையாளத் திரையுலகில் கால் பதிக்கிறார் நடிகர் ஜெய்

மலையாளத் திரையுலகில் கால்பதிக்க உள்ளாராம் ஜெய். முதல் படத்திலேயே மம்முட்டியுடன் நடிக்க உள்ளார். 
இப்படம் கடந்த 2010ல் வெளியான ‘போக்கிரி ராஜா’ மலையாளப் படத்தின் தொடர்ச்சியாம். அதில் மம்முட்டியும் பிருத்விராஜும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தற்போது தயாரிக்கும் படத்துக்கு ‘மதுர ராஜா’ என்று தலைப்பிட்டுள்னர். இதில் பிருத்விராஜ் வில்லனாக நடிக்கிறார். 
இந்நிலையில் முக்கியமான கதா பாத்திரம் ஒன்றில் ஜெய்யை ஒப்பந்தம் செய்துள்ளனர். படப்பிடிப்பு தொடங்கி விட்டது. 
கடந்த ஆண்டில் ‘ஜருகண்டி’, ‘கலகலப்பு-2’ ஆகிய இரு படங்களில் நடித்திருந்தார் ஜெய். இந்நிலையில் தனது நடிப்பில் உருவான ‘பார்த்தி’, ‘நீயா-2’, ‘கருப்பர் நகரம்’ ஆகிய படங்களின் வெளியீட்டிற்காக காத்தி ருக்கிறார்.
“வெங்கட் பிரபு படங்கள் எதுவுமே சோடை போனதில்லை. அவர் எனது நல்ல நண்பர் என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும்.
“அவரது இயக்கத்தில் உருவான படங்களில் எனக்கும் தொடர்ந்து வாய்ப்புகளும் நல்ல கதாபாத்திரங்க ளும் தந்து வருகிறார்.
“அவரது ‘பார்ட்டி’ படத்திலும் உற்சாகத்துடன் நடித்து முடித்துள் ளேன். இந்நிலையில் மலையாளப் படத்தில், அதுவும் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்முட்டியுடன் நடிப்பது மகிழ்ச்சி தருகிறது,” என்கிறார் ஜெய்.
 

Loading...
Load next