கண்ணசைவால் கவர்ந்த பிரியா அடுத்து பச்சை குத்தி ஈர்க்கிறார்

தனது கண்ணசைவால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மலையாள நடிகை பிரியா வாரியார் தற்போது வேறு வகையில் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
வேறொன்றுமில்லை, பிரியா தனது மார்பில் பச்சை குத்தியிருக்கிறாராம். அதில் ‘கார்ப் டயம்’ என்று எழுதப் பட்டுள்ளது. இதற்கு லத்தீன் மொழி யில் “எதிர்காலம் குறித்து கவலைப் படாமல் இந்த நொடியை அனுபவித்து வாழுங்கள்,” என்று அர்த்தமாம். 
‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடலில் கண்ணடித்துப் பிரபலமானவர் பிரியா வாரியர். 
இந்தப் படத்தைத் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும்  வெளியிட உள்ளனர்.