ஓவியா: சவால்களுக்கு தயார்

நடிகர் ஆரவ் தனது நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாகச் சொல்கிறார் ஓவியா. அதேபோல் ஆரவ் நலனில் தமக்கும் அக்கறை உண்டு என்கிறார்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்ட ஓவியா வுக்கு புதுப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது ‘காஞ் சனா-3’, ‘90 எம்எல்’, ‘களவாணி-2’ என வரிசையாக பல படங்களில் நடித்து முடித்துள்ளார். இவற்றுள் ‘90 எம்எல்’ தான் முதலில் வெளியாகிறதாம்.
“இது முழுக்க முழுக்க பெண்களைப் பற்றிப் பேசும் படம். இன்றைய நவீன யுகத்தில் பெண்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள், எந்த வகையில் எல் லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை ஜாலியாகச் சித்திரிக்கும் கதை இது.  
“நாயகியாக நான் நடித்திருந் தாலும், ஐந்து பெண் கதா பாத்திரங்களுக்கு முக்கி யத்துவம் அளிக்கப்பட் டுள்ளது. அவர்கள் அனைவருமே புதுமுகங் கள்தான். ஆனாலும் நடிப்பில் பிரமாதப்படுத்தி உள்ளனர். இது ஒரு வகையில் புது முயற்சி என்பேன். ஒருவகையில் சோதனை முயற்சி என்றும் குறிப்பிடலாம்.