இசையால் கவர்ந்த ஷ்ருதிஹாசன்

லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தி இசை ஆர்வலர்களின் பாராட்டுகளைப் பெற்றுள் ளார் ஷ்ருதிஹாசன்.
அக்குறிப்பிட்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவேண்டும் என்பது ஷ்ருதியின் கனவாம். அதற்கான வாய்ப்பு கிடைத்தபோது உடனடியாக லண்டன் பறந்துவிட்டார்.
தனது புதிய இசைத் தொகுப்பில் இடம்பெற உள்ள சில பாடல்களைப் பாடினார் ஷ்ருதி. இந்நிலையில் அப்பாடல்களால் ஈர்க்கப்பட்ட இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பலர் ஷ்ருதியை மீண்டும் லண்டனுக்கு வந்து இசை நிகழ்ச்சி நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனராம்.
“இத்தகைய வாய்ப்புகள் தேடி வருவது உற்சாகத்தை அளிக்கிறது. பிரபல இசைக் கலைஞர்கள் தங்களது இசை நிகழ்ச்சிகளை நடத்திய இடங்களுக்கு என்னையும் அழைப்பதை பெருமையாகக் கருதுகிறேன். நடிப்பு மட்டுமல்லாது இசையிலும் இனி கூடுதல்  கவனம் செலுத்துவேன்,” என்கிறார் ஷ்ருதி.
தற்போது ஷ்ருதியின் இசைநிகழ்ச்சிகள் தொடர்பான காணொளி கள் இணையத்தில் பலராலும் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.