காதல் தேவதையாக விரும்பும் பிரியா வாரியார்

சினிமா ரசிகர்களின் காதல் தேவதையாக, கனவுக்கன்னியாக இருக்கவேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார் இளம் நாயகி பிரியா வாரியார். 
இவரது நடிப்பில் உருவான ‘ஒரு அடார் லவ்’ மலையாளப் படம் தற்போது தமிழில்  வெளியாக உள்ளது. இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்ள வருகிறார் பிரியா. 
சினிமாவில் காதல் தேவதையாக, மென்மையான இளம்பெண்ணாக வலம் வருபவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் துணிச்சலான பெண். எத்தகைய சூழ் நிலையிலும்  தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தெரியும் என்கிறார். 
ஒன்பதாம் வகுப்பு படித்தபோது சக மாணவர் ஒருவர் இவரைக் காதலிப்பதாகக் கூறினாராம். பிரியாவும் அந்த மாணவரைக் காதலித்துள்ளார். பிறகு அது உண்மையான காதல் உணர்வல்ல என்றும் வெறும் கவர்ச்சி, ஈர்ப்பு என்றும் புரிந்து போனதாம்.
“இருவருமே இந்த உண்மையை உணர்ந்தோம். அதனால் மனம் விட்டுப் பேசிப் பிரிந்துவிட்டோம். இப்போது நடிப்பிலும் படிப்பிலும் மட்டுமே எனது முழுக்கவனமும் உள்ளது,” என்று சொல்லும் பிரியாவுக்கு தமிழில் விஜய்தான் பிடித்தமான நடிகர்.