‘கழுகு 2’ படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடிய யா‌ஷிகா

கிருஷ்ணா, பிந்துமாதவி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கும் படம் ‘கழுகு 2’. சத்யசிவா இயக்குகிறார். காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசை யுவன்சங்கர் ராஜா. மேற்குத் தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிருஷ்ணா. ஒரே ஒரு பாடல் காட்சியில் யா‌ஷிகா ஆனந்த் நடனமாடி உள்ளாராம். இது இளையர்களை வெகுவாகக் கவரும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.