‘உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம்’

நடிகைகள் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்கிறார்  நாயகி ஆஷ்னா ஜாவேரி. 
தமிழ்ப் படங்களில் நடிப்பது குறைவு என்றபோதிலும் தமிழ் கற்பதில் ஆர்வமாக இருப்பதாகச் சொல்கிறார். 
‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் கால் பதித்தவர் ஆஷ்னா. அதையடுத்து ‘இனிமே இப்படித்தான்’, ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘பிரம்மா டாட் காம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர், தற்போது ‘கன்னித்தீவு’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். 
வருடத்துக்கு இரண்டு படங்களில் நடித்தால் போதும் என்று முடிவெடுத்து விட்டீர்களா? என்று கேட்டால் அப்படியெல்லாம் இல்லை என அவசரமாக மறுப்பு வருகிறது. 
“நடிப்பது இரண்டு படங்களாக இருந்தாலும் அதற்காக மெனக்கெடும் நாட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். படப்பிடிப்பு நீண்டுகொண்டே போவது, தொழில்நுட்பப் பணிகள் என்று பல விஷயங்கள் உள்ளன. 
“ஒரு படத்தை முடித்த பிறகே அடுத்த வாய்ப்பை ஏற்கிறேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. 
“நடிகைகள் குறிப்பாக கதாநாயகிகள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது மிக முக்கியம். சினிமா உலகில் நமக்கென உள்ள தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதிலும் கவனம் தேவை. படங்களில் நடிக்காத போது இந்த வேலைகளைத் தவறாமல் செய்வேன் என்கிறார் ஆ‌ஷ்னா ஜாவேரி. 
2019-01-29 06:00:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்