‘கவர்ச்சிப் படங்கள் மூலம் பிரபலப்படுத்திக்கொள்ளும் தேவை ஒன்றுமில்லை’

தமிழ், தெலுங்குப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்த ஹன்சிகா, இப்போது சில படத்தில்தான் நடித்து வருகிறார். கடந்த வாரம் அவருடைய நீச்சல் உடை புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் பரவின. இதைப் பார்த்த பலரும் ‘நம்ம ஹன்சிகாவா இப்படி?’ என வியந்தனர். அதைத் தொடர்ந்து ஹன்சிகா தன்னுடைய கைபேசி, டுவிட்டர் ‘ஹேக்’ செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், அண்மைய தொலைக்காட்சிப் பேட்டியில் அவை தன்னுடைய புகைப்படங்கள்தான் என்று தெரிவித்துள்ளார். “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் உள்ளாடை நிறுவனத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படக் காட்சிகள் அவை. அவை உண்மையான புகைப்படங்கள்தான். ஆனால், அவற்றுள் சில புகைப்படங்களை வேண்டும் என்றே ஹேக்கர் கள் ‘மார்பிங்’ செய்து வெளியிட்டுள்ளனர். “நான் அறிமுகமான காலத்திலிருந்தே என்னை அதிக மாகப் பிரபலப்படுத்திக்கொண்டது கிடையாது. அப்படி இருக்கும்போது இப்போது மட்டும் அந்தப் புகைப்படங்கள் மூலம் நான் ஏன் என்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்றும் ஹன்சிகா தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரகாலமாக ஹன்சிகா டுவிட்டரில் எந்தப் பதிவும் போடாமல் அமைதிகாத்து வருகிறார்.

Loading...
Load next