காஜல்: நடிகர்களை மணக்கமாட்டேன்

பொதுவாக திருமணம் என்பது ஆயிரம் காலத் துப் பயிர் என்பர். சிலர் காதலித்து திருமணம் புரிவர். சிலர் பெற்றோர் பார்க்கும் மணமகனுக்கு கழுத்தை நீட்டுவர். என் திருமணம் நான் விரும்பும் ஒருவருடன் காதல் திருமணமாகத் தான் நடக்கும் என்று கூறியுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.  
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக விளங்கும் காஜல் அகர்வாலுக்கு இன்னமும் திருமணம் ஆகாத நிலையில், “என் திருமணம் என் விருப்பம்போல்தான் நடக்கும்,” என்றும் தெரிவித்துள்ளார். 
கிசுகிசுக்களில் அதிகம் சிக்காதவரான காஜல் அகர்வால், தனது திருமணம் குறித்து அளித்த பேட்டியில் “திரைத்துறையில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்துகொள்ள நான் விரும்பவில்லை. இது எனது சொந்த கருத்து. எனது வாழ்க்கைக்குப் பொருத்தமான, என் மனதுக்குப் பிடித்தமானவரையே நான் மணப்பேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், சினிமா நடிகரையோ அல்லது சினிமாத் துறை சம்பந்தப்பட்டவரையோ மணக்க விரும்பவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி உள்ளார் காஜல்.