ஆரியா, சாயிஷா மார்ச் 10ல் திருமணம்

பொதுவாக திரையுலகில் நடிகர் நடிகைகள் காதலிப்பதும் பின்னர் அதெல்லாம் உண்மையில்லை, நாங்கள் நண்பர்களாகத் தான் பழகுகிறோம். இருவர் உள்ளன்போடு பழகினால் அதற்கு காதலிப்பதாகத்தான் அர்த்தமா? வேறு எந்த காரணங்களும் இல்லையா? என்றெல்லாம் கேட்டு சிலர் விலகி விடுவதும் உண்டு. விலகாமல் சேர்ந்து இருப்பதும் உண்டு. இப்படி சிம்பு-நயன்தாரா, திரிஷா-ராணா காதலுடன் பழகிப் பிரிந்தனர். ஆனால் அதேவேளையில் காதலில் ஒன்றாக இணைந்தவர்களும் உள்ளனர். ஜோதிகா-சூர்யா, அஜித்-ஷாலினியைப் போல் மற்றொரு திரைத்துறை தம்பதிகளும் திருமண வாழ்வில் இணையவுள்ளனர். தமிழ்ச் சினிமாவில் 2005ஆம் ஆண்டு வெளிவந்த ‘உள்ளம் கேட்குமே’ என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ஆர்யா. அதன்பின் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ‘நான் கடவுள்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன், ‘அவன் இவன்’, ‘ராஜா ராணி’ ஆகிய படங்கள் அவருடைய நடிப்பில் வெளிவந்த முக்கியமான படங்கள். சாயிஷா 2015ல் தெலுங்கில் வெளி வந்த ‘அகில்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தமிழில் 2017ல் வெளி வந்த ‘வனமகன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். ‘கஜினிகாந்த்’ படத்தில் ஆர்யா, சாயிஷா ஷைகல் இருவரும் இணைந்து நடித்தார்கள். அடுத்து ‘காப்பான்’ படத்திலும் ஆர்யா நடிப்பதால் அதன் படப்பிடிப்பு சமயத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகத் தெரிகிறது. கடந்த சில வாரங்களாகவே இருவருக்கும் இடையில் காதல் எனப் பல செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன.

Loading...
Load next