‘தமிழ்ப் பெண்களாலும் பெரிய கதாபாத்திரத்தில் நடிக்க முடியும்’

ஒரு பெரிய கதாபாத்திரத்தில் தமிழ் பெண்களாலும் நடிக்கமுடியும் என்பதை இயக்குநர்கள் நம்பவேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை ஸ்ரீபிரியங்கா.
'அமைதிப்படை 2', 'கங்காரு' ஆகிய படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, 'மிக மிக அவசரம்' என்னும் படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். இதில் பெண் காவலர் கதாபாத்திரத்தில் ஸ்ரீபிரியங்கா நடித்து உள்ளார்.
சீமான், அரீஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இஷான் தேவ் இசையமத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்ட காட்சி வெளி யீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய ஸ்ரீ பிரியங்கா, "நிறைய போராட்டங்களுக்குப் பிறகு 'மிக மிக அவசரம்' படத்தின் மூலம் மிகவும் துணிச்சலான தனி ஒரு பெண்ணாக, பெண் சிங்கமாக இன்று நான் நிற்கிறேன். அதற்கு சுரேஷ் காமாட்சி சாருக்குத்தான் சொல்ல வேண்டும்.
"எல்லோரும் ஏன் பெரிய படங்களில் நடிப்பதில்லை என என்னிடம் கேட்கிறார்கள். இங்கே நிறைய பேருக்கு நான் கதாநாயகியாக ஒரு முழுநீளப் படத்தையும் தாங்கிப் பிடிப்பேனா என்கிற சந்தேகம் இருக்கிறது. ஆனால் என்னால் முடியும்.
"தமிழ்ப் பெண்ணான எனக்குத் தமிழ் சினிமாவில் ஒரு இடம் இருக்கிறது என்பதை இப்படம் சொல்லும்.
"இந்த மாதிரி கதையும் கதாபாத்தி ரமும் நயன்தாராவிற்கு நீண்ட நாட் கள் கழித்துத்தான் கிடைத்தது. ஆனால் எனக்குக் குறுகிய காலத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது.
"வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் கதாநாயகிகளுக்கு என்ன திறமை உள்ளது எனத் தெரியவில்லை. அவர்களுக்குத் திறமை உள்ளது என நம்பிக்கை வைத்து ஒரு கதாபாத்திரம் அளிக்கும்போது ஏன் எங்களுக்கும் தரக்கூடாது?
"தமிழ்ப் பெண்களாலும் ஒரு பெரிய கதா பாத்திரத்தை ஏற்று நடிக்கமுடியும் என்பதை இங்குள்ள இயக்குநர்கள்தான் நம்ப வேண்டும். அப்போதுதான் எங்களாலும் மேலே வரமுடியும்," என்று சொன்னார்.
இயக்குநர் சுரேஷ் காமாட்சி பேசிய போது, "எப்போதுமே என்னை சர்ச்சையாக பேசுகிறான் என்கிறார்கள். உண்மையைப் பேசினால் அதை சர்ச்சை எனக் கூறினால் நான் தொடர்ந்து அப்படித்தான் பேசுவேன்.
இப்படத்தைப் பற்றி, படக்குழுவினரை பற்றி வெற்றி விழாவில் பேசினால்தான் சரியாக இருக்கும். படத்தைப் பார்த்துவிட்டுக் குறை, நிறை என எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகவே சொல்லுங்கள்.
"ஏனென்றால் விமர்சனம் என்பது இங்கே கட்டாயம் தேவை. அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் விமர்சிப்பவர்கள் மீது புகார் கொடுப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை.
"நாம் இதுபோல செய்தால், படத்தில் நாம் கடுமையாக விமர்சிக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லாம் இதே விஷயத்தைப் பின்பற்றி நம் மீது திருப்பினால் என்ன ஆகும் என்பதை யோசிக்க வேண்டும்.
"சின்ன படங்கள் ஓடுவதற்கு கட்டாயம் விமர்சனம் தேவை. அவை குறையாக இருந்தாலும் நிறையாக இருந்தாலும் நமது படம் பேசும் பொருளாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்," எனக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!