அபர்ணா: இசைக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன்

‘சர்வம் தாள மயம்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்து உள்ள அபர்ணா பாலமுரளி தனக்கு ஆர்வம் இருந்தாலும் இசைக்குத்தான் முதலிடம் என்று கூறியுள்ளார்.
’எட்டுத் தோட்டாக்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறி முகமான அபர்ணா பாலமுரளி மலையாள வரவு.
‘சர்வம் தாள மயம்’ படம் பற்றி பேசிய அவர், “எந்த மொழி படமாக இருந்தாலும் அதில் என் கதாபாத்திரம் வலுவாக இருக்க வேண்டும்.
“அப்படிதான் ’மகே‌ஷிண்டே பிரதிகாரம்’, ‘எட்டுத் தோட்டாக் கள்’ தொடங்கி `சர்வம் தாள மயம்‘ படம் வரை என்னுடைய கதாபாத்திரம் பார்த்துதான் படத்தைத் தேர்வுச் செய்கிறேன்.
‘சர்வம் தாள மயம்’ படம் ஆசிரியர் = மாணவர் உறவை பேசும் படம். அதனால் என் கதாபாத்திரத்துக்கு ரொம்ப முக் கியத்துவம் இருக்காது.
“படம் முழுக்க வர மாட்டேன். சில காட்சிகளில் வந்தாலும் அது படத்துக்கு முக்கியமானதாக வும் ரசிக்கும்படியாகவும் இருக் கும்.
“மலையாள படங்களில் நடிக்கும்போது நான் எவ்வளவு குண்டாக இருந்தாலும் அதை பற்றி நான் கவலைப்பட மாட் டேன். இயக்குநர்களும் அதைப் பற்றி எதுவும் சொல்வது இல்லை.
“ஆனால், நான் தமிழ்ப் படங் களிலோ அல்லது வேற மொழிப் படங்களிலோ நடிக்கும்போது நான் உடம்பைக் குறைக்க வேண்டிய அவசியம் இருக்கு. 
“அதுக்காகத்தான் தற்போது உடற்பயிற்சி கூடத்திற்கு போய் உடல் எடையை குறைத்துக் கொண்டு இருக்கிறேன்.
“மலையாளத்தில் நிறைய பாடல்கள் பாடியிருக்கேன். தமிழில் `எட்டுத் தோட்டாக்கள்’ படத்தில் கூடப் பாடியிருக்கேன்.
“அப்பா, அம்மா இரண்டு பேருமே இசைக்கலைஞர்கள் தான். எதிர்பாராமல்தான் நடிக்க வந்தேன். எப்பவுமே இசைக்குத் தான் முன்னுரிமை கொடுப்பேன்,” என்றார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்