ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்த்து மகிழ்ந்த சிம்பு, மேகா 

அண்மையில் வெளியான ரஜினி யின் ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படம் வசூலில் பப்டையைக் கிளப்பிக்கொண்டி ருக்கின்ற நிலையில், நேற்று சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன், பேரன்பு, சர்வம் தாள மயம், சகா ஆகிய படங்கள் வெளியாகின. 
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் முதல் காட்சியை நடிகர் சிம்பு தனது ரசிகர்களுடன் திரையரங்கில் அமர்ந்து பார்த்து உள்ளார்.
சுந்தா.சி இயக்கத்தில் தயா ராகியுள்ள இப்படத்தை சென்னை ரோகிணி திரையரங்கில் நடிகர் சிம்பு, நடிகை மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் அமாந்து படத்தின் முதல் காட்சியைப் பார்த்து ரசித்தனர்.
தனது பேனருக்கோ, சுவ ரொட்டிக்கோ ரசிகர்கள் பால் ஊற்ற வேண்டாம் என்று சிம்பு கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் நேற்று காலையிலேயே திரையரங்குகள் முன் குவிந்த ரசிகர்கள் பேனர்களுக்குப் பால் ஊற்றியும் மாலை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்தும் கொண் டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கசப்பான சம்பவத்தால் பிரிந்து போன அத்தையை மீண்டும் வீட்டுக்குள் கொண்டு வரப் போராடும் மருமகனின் கதை தான் ‘வந்தா ராஜாவாதான் வரு வேன்’.
தெலுங்கில் வெற்றி பெற்ற 'அத்தாரண்டிகி தாரேதி’ படத்தை மறு ஆக்கம் செய்திருக்கிறார் சுந்தர்.சி. அவருக்கே உரிய கலகலப்பு ஆங்காங்கே இருந்தா லும் படம் முழுக்க அதைப் பரவவிடவில்லை.
அலட்ட வேண்டிய இடத்தில் அலட்டல், அடக்க வேண்டிய இடத்தில் அடக்கம், ஆக்ஷன் வேண்டிய இடத்தில் ஆக்ஷன் எனத் தன்னை ராஜாவாவே நினைத்து நடிப்பில் ஆட்சி செய்கிறார் சிம்பு. உச்சகட்ட காட்சியில் பாசமழையில் கண் கலங்க வைக்கிறார்.
ரோபோ ஷங்கர் கதாபாத்திரத் தில் கச்சிதமாகப் பொருந்தி சிரிக்க வைக்கிறார். யோகி பாபு இரண்டாம் பாதியின் சில இடங்களில் சுவாரஸ்யம் சேர்க்கி றார்.
கேத்ரீன் தெரசாவுக்கு அதிக வாய்ப்பு இல்லை. மேகா ஆகா‌ஷுக்கு நடிப்பு இன்னும் கைவரப் பெறவில்லை.
சிம்புவுடனான காதல், மோத லில் மட்டும் படத்தின் கதாநாயகி என்பதை நினைவுபடுத்துகிறார் மேகா.
நாசர் மகளைப் பிரிந்து வாடும் பாசத் தவிப்பை சில நுட்பமான அசைவுகளில் வெளிப்படுத்தி விடுகிறார்.
கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும், ஹிப் ஹாப் தமிழா ஆதியின்  பின்னணி இசையும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. 

Loading...
Load next