ரசிகர்கள் எதிர்ப்பு

‘பாரிஸ் பாரிஸ்’ படத்தைத் தொடர்ந்து காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீதா’ படத்தின் முதல் பார்வை சுவரொட்டி வெளியாகி இருக்கும் நிலையில், அந்த சுவரொட்டிக்கு காஜல் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் காஜல் அகர்வால், முதன்முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் நடித்திருக் கிறார். 
இந்தியில் கங்கனா ரணாவத் நடித்த ‘குயின்’ படத்தின் தமிழ் மறுபதிப்பு இது. 
அண்மையில் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் முன்னோட்டக் காட்சி  வெளியானது. அதில் காஜலுக்கு சக தோழி பாலியல் தொல்லை தருவது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்று இருந்தது. 
அது ரசிகர்களை அதிர்ச் சிக்குள்ளாக்கியது. தமிழ்த் திரைப்படங்களில் இத்தகைய காட்சி அமைப்புகள் மிகக் குறைவு. ஆனால், அந்தக் காட்சிபற்றி காஜல் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.
இதற்கிடையில், தெலுங்கில் அவர் நடித்துவரும் ‘சீதா’ எனும் படத்தின் முதல் பார்வை சுவரொட்டி  வெளியிடப்பட்டது.
அதைக்கண்ட ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சியில் உள்ளனர். ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் சர்ச்சைக்குரிய காட்சியில் காட்டிய அதே முகபாவனையை ‘சீதா’ படத்தின் சுவரொட்டியிலும் காஜல் வெளிப்படுத்தியிருப்பதே  ரசிகர்களின் அதிர்ச்சிக்குக் காரணம்.
‘சீதா’ படத்தின் நாயகன் ‘ஜாலி’யான முக பாவனையைக் காட்டி உள்ளார். 
தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித் தாலும் இதுபோன்ற காட் சிகளில் காஜல் நடித்த தில்லை. தமக்கென ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருக்கிறார் அவர்.
இதுபோன்ற காட்சி களில் நடித்திருப்பதற்கு காஜலை அவரது ரசி கர்கள் சமூக வலைத் தளங்களில் பெரிதும் விமர்சித்து வருகின் றனர். 
தற்போது அவ ருக்குத் தமிழில் பட வாய்ப்புகள் குறைந்திருப் பதும் கவனிக்கத் தக்கது.