இளையராஜா 75: 17,000 ரசிகர்கள் பங்கேற்பு

தயாரிப்பாளர் சங்கத்தின் சார் பில் நடத்தப்படும் இளையராஜா 75 இசை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. அதில் சுமார் 17,000 ரசிகர்கள் பங்கேற்ப தாகக் கூறப்பட்டது.
தமிழ் திரைப்படத் தயாரிப் பாளர்கள் சங்கத்தின் சார்பில் இசைஞானி இளையராஜாவைக் கௌரவப்படுத்த ‘இளையராஜா 75’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்றுடன் இரு நாட்களுக்கு நடத்தப்படுகிறது. 
தென்னிந்தியத் திரையுல கினர் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் இருந்து சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் ஏராள மானோர் இந்த விழாவில் கலந்துகொள்வர். 
தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் தொடங்கிவைத்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பங்கேற்றனர். 
இளம் நடிகர், நடிகைகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், பாடல் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. 
இன்று மாலை இளையராஜா வின் (படம்) நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறும். 
இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங் கள் கலந்துகொள்கிறார்கள். 
இந்த நிகழ்ச்சிக்கான மேடை வடிவமைப்பு, திறந்த வெளி அரங்க அமைப்பு ஆகிய பணிகளைப் பார்வையிட்ட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், “இந்த விழாவில் நாள் ஒன்றுக்கு 17,000 இசை ரசிகர்கள் வருகை தருவார்கள்” என்றார்.