தமிழில் பெயர் அச்சிடப்பட்ட சேலை; கடும் விமர்சனம்

தமது பெயரையும் தாம் அண்மை யில் நடித்த படத்தின் பெயரையும் தமிழில் அச்சிட்ட சேலை ஒன்றை அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் நடிகை சோனம் கபூர்.
சேலையில் அவரது பெயரும் அதனை உருவாக்கிய மஸாபா குப்தா என்பவரது பெயரும் ‘சோனம் மஸாபா’ என சரியாக அச்சாகியிருந்தாலும் அவர் நடித்த ‘Ek Ladki Ko Dekha Toh Aisa Laga’ என்ற இந்திப் படத்தின் பெயர் தமிழில் தாறுமாறாக அச்சிடப்பட்டிருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதிலும் சிலர் ‘சேலையின் துணி அழகாக இருந்தாலும் ஒரு இந்திப் படத்தின் பெயரை ஏன் தமிழில் எழுத வேண்டும்? அதனால்தான் விசித் திரமான பிழைகள்?,” என்று கார்த்திக் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல இந்தி பிரபலங்கள் பலரும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள் ளனர்.
சோனம் கபூர் நடித்த ‘ஏக் லட்கி கோ தேக்கா டோ ஐசா லகா’ எனும் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடையே பரவலான வர வேற்பைப் பெற்றுள்ளது. ஓரே பாலின உறவுகள் பற்றிய படம் அது. பெரும்பாலும் பாலிவுட் படங்களில் அத்தகைய கதைக்கரு இடம் பெறுவதில்லை.
அந்தப் படத்தைப் பற்றி ஊடகங்களும் நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளன. சோனம் கபூரின் தந்தை அனில் கபூர், நடிகர் ராஜ்குமார் ராவ், நடிகை ஜூஹி சாவ்லா ஆகியோரும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை இயக்கியவர் புதுமுக இயக்குநர் ஷெல்லி சோப்ரா தார். இந்தப் படத்தின் கதாசிரியர்களில் அவரும் ஒருவர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்