சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனுஷ்

நடிகர் சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு நேற்று தனது 35வது பிறந்த நாளை கிண்டியில் இருக்கும் நட்சத்திர விடுதியில் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சிம்புவின் நெருங்கிய திரைத்துறை நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைப்பை ஏற்று நடிகர் தனுஷ், ஜெயம் ரவி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஷ் கல்யாண், மகத், யா‌ஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலரும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் தனு‌ஷும் சிம்புவும் கட்டியணைத்து, ஒரே மாலையை இருவரும் அணிந்து படம் பிடித்துக்கொண்டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்