யோகா பயிற்சிகளில் தற்போது ஆர்வமாக ஈடுபட்டு வரும் நடிகை ரகுல் பிரீத் சிங், "மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உடல் வலிமை முக்கியம். உடற்பயிற்சி என்பது நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருக்கவேண்டும். உடல் வலிமை யாக இருந்தால்தான் எதையும் தாங்கும் மனப்பக்குவம் வரும்," என்கிறார். "எனக்கு ஒருநாள் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் வாழ்க் கையில் எதையோ இழந்தது போல் தோன்றும். "கவலையோ, மகிழ்ச்சியோ, வருத்தமோ எதுவாக இருந்தாலும் சரி, உடற்பயிற்சியை மட்டும் நான் நிறுத்தவே மாட்டேன். "நீங்கள் எதை விதைக்கிறீர் களோ அதுதான் செடியாக முளைத்து வரும். விதை ஒன்று வைக்க சுரை ஒன்று முளைக்காது. எனவே நீங்கள் உடம்பை எப்படி பராமரிக்கிறீர்களோ அதைப் பொறுத்தே உங்கள் உடல் நலமும் அமையும். "விரும்பியதை சாப்பிட்டு, முடிந்தளவு தொடர்ந்து உடற் பயிற்சி செய்து வந்தால் ஒவ் வொரு கணமும் வாழ்க்கையை அனுபவித்து வாழலாம்," என் கிறார் ரகுல். "கார்த்தியுடன் தேவ்', சூர்யாவுடன் 'என்ஜிகே' ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவ கார்த்திகேயனின் 14வது படத்தில் நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகும் 'தேவ்' படம் மிகப்பெரிய வெற்றியடைந்து ஒரே நேரத்தில் இரண்டு மொழி களிலும் தனது வாய்ப்பை உயர்த் தும் என நம்புகிறார் ரகுல். இந்தப் படம் வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது. அதோடு இந்திப் படங்களிலும் நடித்து வரும் அவர், தற்போது சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் 'மர்ஜாவான்' என்ற படத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்திற்காக தற்போது தீவிரமான யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஏன் இப்படி திடீரென்று யோகா பயிற்சியில் இந்த அதீத ஆர்வம்? இப்படத்தில் ஏதாவது யோகா டீச்சர் வேடத்தில் நடிக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்ட தற்கு, செல்லமாக சிணுங்கிச் சிரிப்பவர், இப்போதே அதைப் பற்றி எல்லாம் நான் சொல்லிவிட விரும்பவில்லை என்கிறார். ஆனாலும் யோகாவின் அவ சியத்தை உணர்த்தும் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறேன் என்று மட்டும் பதில் கூறி மௌனத்துடன் ரகசியம் காத்துள்ளார். தமிழில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் புகழ்பெற்ற ரகுல் பிரீத் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். "இந்த வயதில் உழைத்துத் தான் ஆகவேண்டும். இப்போது சும்மா இருந்தால் கடைசி காலத் தில் உட்கார்ந்து சாப்பிடமுடியாது என்று பெரியவர்கள் சொல்வார் கள். இந்த வார்த்தைகள் அடிக்கடி என் மனதில் நிழலாடிக்கொண் டிருக்கும். "இப்போது முதல் ஒவ்வொரு நாளும் கூடுதலாக உழைக்க முடிவு செய்துள்ளேன். இந்த ஆண்டில் பல்வேறு இடங்களிலும் ஹோட்டல் திறக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளேன். அந்த எண்ணத்தில் நான் வெற்றி பெற ஆசையாக உள்ளேன்," என்கிறார் ரகுல்.
'விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்காது; உடலும் அப்படித்தான்'
2 mins read
-

