உதயநிதிக்கு ஜோடியான ஆத்மிகா

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாகி உள்ளார் ஆத்மிகா. 
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை அடுத்து மு. மாறன் இயக்கும் இந்தப் புதிய படத்துக்கு ‘கண்ணை நம்பாதே’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். 
இது அதிரடியும் திகிலும் நிறைந்த கதைக்களத்துடன் உருவாகிறதாம். அடுத்த வாரம் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளனர். சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். 
“உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி. அவரது வளர்ச்சி என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. இது எனக்கு வெற்றிப்படமாக அமையும் என நம்புகிறேன். தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்துவிட்டால் போதும். வேறு எந்த மொழிக்குச் சென்றாலும் சுலபத்தில் வெற்றி பெற்றுவிடலாம்.
“தமிழ் ரசிகர்கள் திறமைசாலிகளை வரவேற்று அங்கீகரிக்க தவறியதே இல்லை,” என்கிறார் ஆத்மிகா.
 

Loading...
Load next