விஜய் நடிக்கும் ‘மைக்கேல்'

மூன்றாவது முறையாக விஜய் படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்ததில் இயக்குநர் அட்லி மகிழ்ச்சியாக உள்ளார். 
இந்நிலையில் ‘தளபதி 63’ என்று குறிப்பிடப்படும் விஜய்யின் அடுத்த படத்துக்கு ‘மைக்கேல்’ என்று தலைப்பு வைக்கப் பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது. 
இதில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர் மகள் இந்திரஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். 
இப்படம் இந்தாண்டு தீபாவளி நாளன்று வெளி யாகுமாம். 
இப்படத்தில் விஜய் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு ‘மைக்கேல்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். கதைப்படி விளையாட்டுப் பயிற்சியாளராக வருவாராம். இதற்காக தன்னுடைய உடற்கட்டை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் விஜய். 
இந்நிலையில் அவரது கதாபாத்திரத்தின் பெயரே இப்படத்தின் தலைப்பாக அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.