‘தில்லுக்கு துட்டு- 2’

ராம் பாலா இயக்கத்தில் சந்தானம், ‌ஷிர்தா சிவதாஸ் இணைந்து நடித்துள்ள படம் ‘தில்லுக்கு துட்டு- 2’. ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன், விஜய் டிவி ராமர், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷபீர் இசையமைக்க, சந்தானம் தயாரித்துள்ளார். “பொதுவாகப் பேயைப் பார்த்துதான் மனிதர்கள் பயப்படுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் எல்லாம் தலைகீழாக நடக்கும். கதைப்படி ஆட்டோ ஓட்டுநராக நடிக்கிறேன். படத்தில் நகைச்சுவைக்குக் குறைவு இருக்காது,” என்கிறார் சந்தானம்.