திரையேறும் ‘கண்ணழகி’ பிரியா வாரியர்

மலையாளத் திரைப்படப் பாடல் காட்சியில் கண்ணடித்து பல இதயங்களைக் கொள்ளை கொண்ட புதுமுக நடிகை பிரியா வாரியர் இப்போது வெள்ளித்திரையிலும் நடிக்க உள்ளார். அவரும் புதுமுக நடிகர் ரோஷன் அப்துல் ரஹூஃபும் ‘ஒரு அதார் லவ்’ என்ற படத்தில் நடிக்கின்றனர்.

இரு கதாபாத்திரங்களுக்கு இடையிலான காதலைக் காண்பித்த திரைப்பட முன்னோட்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்தது. 

இளம் மாணவர்களுக்கு இடையே மலரும் காதலை வெளிப்படுத்தும் இந்தத் திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியிடப்படும்.