கைபேசியை மீண்டும் தட்டிவிட்ட சிவகுமார்

நடிகர் சிவகுமார், தம்முடன் செல்ஃபி எடுக்க முற்பட்ட மற்றொரு ரசிகரின் கைத்தொலைபேசியை கீழே தட்டிவிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சிவகுமார் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்தது.

சிவகுமார் அவ்வாறு செய்ததைக் காட்டும் காணொளி மீண்டும் தீயாகப் பரவியுள்ளது. அவருக்கும் கைத்தொலைபேசிக்கும் இடையே நிகழும் இந்த மகாபாரதத்தைப் பற்றி பலர் சமூக ஊடகங்களில் கேலி செய்து வருகின்றனர். இதற்கு முன்பு இதேபோல் செல்ஃபி எடுத்த ரசிகர் ஒருவரிடம் சிவகுமார் கோபமாக நடந்துகொண்டு அவரது கைத்தொலைபேசியைத் தட்டிவிட்டார். 

நடிப்பு உலகில் பழுத்த அனுபவத்தையும் நற்பெயரையும் பெற்றிருக்கும் அவர் இவ்வாறு நடந்துகொள்வது சரியல்ல என்று சிலர் கண்டிக்கவும் செய்தனர். இது குறித்து சிவகுமார் மன்னிப்புக் கேட்டிருந்தார். ஆயினும், இப்போது அவர் மீண்டும் அதே காரியத்தைச் செய்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.