எதிர்ப்புகள் குவிந்தாலும் உறுதியாக இருக்கும் எஸ்.பி.பி

பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் கவர்ச்சி உடைகள் அணிவது குறித்து பிரபல சினிமா பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்புகளும் கண்ட னங்களும் வலுத்து வருகின்றன.
அண்மையில் ஆந்திராவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங் கேற்று பேசிய அவர், நடிகைகளின் உடைகள் பற்றி கடுமையாக விமர்சித்தார்.
“கதாநாயகிகள், சினிமா விழாக்களில் கலந்துகொள்ளும் போது அரைகுறையாக ஆபாசமாக உடை அணிந்து உடம்பைக் காட்டுகிறார்கள்.
“பொது நிகழ்ச்சிகளுக்கு எப்படி உடை அணியவேண்டும் என்ற உணர்வு இல்லை.
“கவர்ச்சி உடை அணிந்து உடம்பைக் காட்சி பொருளாகக் காட்டினால்தான் அந்த விழாவுக்கு வரும் இயக்குநர்களோ, தயாரிப் பாளர்களோ வாய்ப்பு கொடுப்பார் கள் என்று எதிர்பார்க்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.
“நமது கலாசாரம், சமூக உணர்வு எதுவுமே அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. நான் இப்படிப் பேசுவதால் நிறைய கதாநாயகிகளுக்குக் கோபம் வரலாம். ஆனால் அவர்களுக்குத் தெலுங்கு தெரியாது,” என்றார்.
சர்ச்சையை ஏற்படுத்திய பாலசுப்பிர மணியத்தின்  இப்பேச்சு குறித்து தெலுங்கு ஒளிவழிகளில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவரது பேச்சைப் பல்வேறு பெண்கள் அமைப்புகள் கண்டித்து உள்ளன.
அந்த அமைப்பினர் கூறும் போது, “பெண்களுக்கு எதிராக சினிமாத் துறையில் பல கொடுமைகள் நடக்கின்றன.
“பட வாய்ப்புக்காக நடிகை களைப் படுக்கைக்கு அழைக்கி றார்கள். இதையெல்லாம் அவர் கண்டிக்காதது ஏன்?,” என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஒளிவழி விவாதத்தில் கலந்து கொண்ட ஆண்களோ, “பாலசுப் பிரமணியம் பேசியதில் தவறு இல்லை.
“பெண்கள் கவர்ச்சி உடை அணிவதால்தான் பாலியல் கொடு மைகள் நடக்கின்றன என்பதை தான் அவர் சொல்லி இருக்கிறார்,” என்றனர்.
வலுத்து வரும் எதிர்ப்பைத் தொடர்ந்து எஸ்.பி.பி. வெளியிட்ட விளக்க அறிக்கையில், “எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நான் சொன்ன கருத்தில் உறுதியாக இருக்கி றேன்,” என்று கூறியுள்ளார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும் வேறு யாருடன் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அமலா பால்.

20 Jul 2019

மறுமணத்திற்குத் தயாராகும் அமலா பால்