‘ஐம்பது வயதிலும் சாதிக்க முடியும்’

நாற்பது வயதைத் தாண்டிவிட்ட போதும் கதாநாயகியாக வலம் வரும் வித்யாபாலன் சாதிப்பதற்கு வயது தடையில்லை என்று கூறி உள்ளார்.
ஒரு படத்தில் நடிக்க இவர் ஆறு கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்குவதாகக் கூறப்பட் டாலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை 2012ல் திருமணம் செய்து கொண்ட வித்யாபாலன், மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்துத் தயாரான ‘த டர்டி பிக்சர்’ படத்தில் நடித்து, தேசிய விருது பெற்றார்.
தெலுங்கில் என்.டி.ராமராவ் வாழ்க்கை கதை படத்தில், அவரது மனைவி பசவதாரகம் வேடத்தில் நடித்துள்ளார்.
இதையடுத்து மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் ‘பிங்க்’ இந்திப் படத் தின் தமிழ்ப் பதிப்பில் அஜித்துடன் நடிக்கிறார் வித்யாபாலன்.
நாற்பது வயதான போதும் கனவு கதாநாயகியாக வலம் வரும் வித்யாபாலன், தன் வெற்றிப் பயணம் குறித்து பேசினார்.
அப்போது, “பெண்களை ஒரு விளையாட்டுப் பொருளாகவும் அடிமையாக இருக்க வேண்டிய ஒரு உயிரினமாகவும் சமூகம் பார்க்கிறது.
“அதேபோல, சிறுவயதில் இருந்தே அவர்கள் எல்லாவற்றிலும் வெட்கப்பட்டே நடக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றனர். 
“இதனால் பாலியல் சம்பந்த மான விஷயங்களில் கூட, கூச்சம் இல்லாமல் அவர்களால் முழுமையாக ஈடுபட முடிய வில்லை. 
“பெண்கள் நாற்பது வயதைக் கடந்த பின்தான் குறும்புத்தனமாக மாறுகின்றனர்.
“இருபது வயதில் கனவை நோக்கி என் வாழ்க்கை நகர்ந்தது.
“முப்பது வயதில், என்னை பற்றி நானே அறிந்து கொள்வதில் காலங்கள் நகர்ந்தன. 
“நாற்பது வயதுக்குப் பின் தான் வாழ்க்கையை அனுபவிக் கிறேன்.
“அதனால், நாற்பது வயதைக் கடந்துவிட்டோம் என எந்தப் பெண்ணும் அச்சம் கொள்ள வேண்டாம்.
“நாற்பது ஒன்றும் பெரிய வயதல்ல. ஐம்பது வயதிலும் கூட எதையும் சாதிக்க லாம்,” என்றார்.
கொசுறு: பிங்க் படத் தின் தமிழ்ப் பதிப்பில்  தன் மகள் தமிழ்ப் படத் தில் நடிக்க வேண்டும் என்ற ஸ்ரீதேவியின் ஆசையையும் நிறை வேற்ற உள்ளார் போனி கபூர்.
அதாவது படத்தில் மகள் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி, அதில் தனது மகள் ஜான்வி கபூரை நடிக்க வைக்க, தயாரிப்பாளர் போனி கபூர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.