மீண்டும் நடிகையாகவே பிறக்க ஆசைப்படும் நதியா

நாயகியாக 80களில் அறிமுகமாகி, தற்போது குணசித்திர நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நதியா, அடுத்த பிறவியிலும் தான் நடிகையாகவே பிறக்க ஆசைப்படுவதாகக் கூறி உள்ளார்.
தனது சினிமா பயணம் பற்றி தமிழக ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “நடிகையாக வேண்டுமென்றோ, புகழ்பெற வேண்டுமென்றோ நினைத்தது இல்லை.
“ஆனால், சினிமா வாய்ப்புகள் என்னைத் தேடி வர ஆரம்பித்த வுடன் அர்ப்பணிப்புடன் நடித் தேன்.
“அதற்குக் கிடைத்த பிரதி பலன்தான் ரசிகர்களின் அன்பு. நான்கு ஆண்டுகள்தான் நடித்தேன். பிறகு திருமணமாகி வெளிநாட்டில் குடி யேறிவிட்டேன்.
“அப்போது தான், ரசிகர்கள் என் மீது வைத்திருந்த அன் பையும் எனக்கான புகழையும் தெரிஞ்சு கிட்டேன்.
“ஆனால், நடிக்காமல் இருந்து விட்டோமே என்று தோன்றியதே இல்லை.
“அதேசமயம், எனக்கான சினிமா வாய்ப்பை இன்னும் நன்றாகப் பயன்படுத்தி இருக்கலா மோன்னு இப்போது நினைக்கி றேன்.
“அதனால் என்ன? நான் அதிகம் எதிர்பார்த்த குடும்ப வாழ்க்கை நல்லா போகுதே.
“உங்க கூட ஜோடியா நடிக் கலாம்னு நினைச்சேன். நீங்க ரொம்ப சீக்கிரமா கல்யாணம் பண்ணிகிட்டு சினிமாவுல இருந்து விலகிப் போயிட்டீங் களே. ஏன் இப்படி பண்ணீங்க அப்படின்னு பல நடிகர்கள் இப் போதும் அன்பாக கேட்கிறாங்க.
“அடுத்த பிறவியிலும் நடி கையாக ஆசைப்படறேன். அப்படி நடந்தால், சினிமா வாய்ப்பைத் திறம்படப் பயன் படுத்துவேன்.
“யதார்த்த மான, எளிமை யான வாழ்க்கை வாழவே ஆசைப் 
படுவேன்.
“சுயநலமாகச் செயல்பட்டால், பொய் பேசினால், எனக்குக் கோபம் வரும்,” எனக் கூறினார்.