கணவரைப் பாராட்டிய ஜெனிலியா

தனது கணவர் ரித்தேஷ் திருமணத்துக்கு முன்பே தமது ஆகச்சிறந்த நண்பராக இருந்தார் என்று கூறியுள்ளார் நடிகை ஜெனிலியா. தனது 7வது திருமண நாளை ஒட்டி தமது கணவருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதுகுறித்து கவலைப்படாமல் தம்மை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்ட தற்காக கணவருக்கு நன்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “ஒருவர் கண்ணீரை மற்றொருவர் துடைக்கவும் பலவீனமான நேரத்தில் ஒருவரை ஒருவர் உயர்த்திக்கொள்ளவும் வாழ்க்கை முழுவதும் நாம் ஒன்றாகவே இணைந்திருப்போம்,” என்றும் ஜெனிலியா மேலும் குறிப்பிட்டுள்ளார்.