இசையின் மீது தீராத காதல்

‘சர்வம் தாள மயம்’ படம் இசை ஆர்வலர் களிடம் மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்க ளிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அந்த வகையில் படத்தின் நாயகன் ஜி.வி. பிரகாஷ் உற்சாகத் துள்ளலுடன் காணப்படுகிறார். 
இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். குழந்தைப் பருவத்தில் இருந்தே இசை யின் மீது தமக்குத் தீராத காதல் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், பள்ளியில் படிக்கும்போதே இசைதான் தமது எதிர்காலம் எனத் தீர்மானித்து விட்டதாகவும் சொல்கிறார். 
ஏழாம் வகுப்பு படிக்கும்போது கலை நிகழ்ச்சியில் கீ போர்டு வாசிக்கும் மாணவர் உடல்நிலை சரி யில்லாததால் வரவில் லையாம். அன்று அம்மாணவனுக்குப் பதிலாக ஜி.வி. பிரகாஷ்தான் நிகழ்ச்சியில் பங்கேற்று கீபோர்டு வாசித்துள் ளார். 
தமது முதல் அனுபவத் திலேயே ‘சிறந்த இசைக் கருவி வாசிப்பா ளர்’ என்ற பாராட்டும் பரிசும் கிடைத்த தாம். 
அந்த முதல் அனுப வம்தான் இன்று வரை என்னை மிகவும் உற்சாகத் துடன் செயல்பட உத்வே கம் அளிக் கிறது என்கிறார் ஜிவி.
ஏ.ஆர்.ரகுமான் இவரது உறவினர் என் பது ஊரறிந்த செய்தி. இந்நிலையில் தம்மையும் அவரையும் ஒப்பிட்டுப் பேசுவதை விரும்ப வில்லை என்கிறார். 
“ரகுமானின் மருமகன் என்று சொன்னால் எனக்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்பது தெரியும். குக் கிராமங்களில்கூட என்னை மாமாவை வைத்தே அடையாளம் காண்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இது ஒரு சுமைதான். 
“முதன்முதலாக ‘வெயில்’ படத்துக்கு இசையமைத்தபோது மாமாவின் அடையாளத்துடனேயே என்னைப் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. எனினும் எனது இசையமைப்பு சற்றே வித்தியாசமாக இருந்ததால் அடுத்து நான் என்ன செய்கிறேன் எனும் ஆர்வத்தைப் பலரிடமும் ஏற்படுத்தியது.
“அடுத்து ‘ஓரம்போ’ வெளியானபோது இது முதல் படம் மாதிரியே இல்லை என்றனர். ‘கிரீடம்’ வெளியீடு கண்டதும் அஜீத்துக்கு ஏற்ற இசை இது இல்லை என்றனர். ஆனால், எது குறித்தும் கவலைப்படாமல் எனது தனித் துவத்தை நிலைநாட்டுவதில் முனைப்பாக இருந்தேன். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும் வேறு யாருடன் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அமலா பால்.

20 Jul 2019

மறுமணத்திற்குத் தயாராகும் அமலா பால்