மீண்டும் உருவாகிறது ‘வர்மா’ படம்

விக்ரம் மகன் துருவ் நடிக்க ‘வர்மா’ திரைப்படம் விரைவில் வெளி யாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படத்தை வெளியிடப் போவதில்லை என படத் தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது. படம் தாங்கள் எதிர்பார்த்த வகையில் உருவாகவில்லை என தயாரிப்பு நிறுவனம் காரணம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, இதே படத்தில் துருவ் மீண்டும் நாயகனாக நடிக்க, வேறொரு இயக்குநர் இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாலா படத்துக்கே இந்தக் கதியா என கோடம்பாக்கத்தினர் மத்தியில் வியப்பும் வருத்தமும் நிலவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்