விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள 'வர்மா' படத்தை வெளியிடப் போவதில்லை என அதன் தயாரிப்பு நிறுவனம் திட்டவட்டமாக அறிவித் துள்ள நிலையில் இதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
மொத்தம் 15 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள படத்தை அப்படியே கைவிடுவதாக அறிவிக் கப்பட்டிருப்பது இந்திய சினிமா வரலாற்றில் இதுவே முதன்முறை எனலாம். இதனால் இயக்குநர் பாலாவின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் மறுபதிப்புதான் 'வர்மா'. தமிழ்த் திரையுலகில் தமக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்த பாலா இப்படத்தை இயக்கினால் தன் மகனுக்குத் திரையுலகில் நல்ல துவக்கம் கிடைக்கும் என்பது விக்ரமின் எண்ணமாக இருந்துள்ளது.
அதனால் மறுபதிப்பு படங்களை இயக்குவதில் தமக்கு விருப்பம் இல்லை என்று மறுத்த பாலாவைப் பலவிதமாகப் பேசி சமாதானம் செய்து இப்படத்தை இயக்கச் சம்மதிக்க வைத்ததாகக் கூறப் படுகிறது. ஆனால், பட வேலைகள் துவங்கிய பிறகு தனது போக்கில் இயக்கினாராம் பாலா.
தெலுங்குப் பதிப்பில் இருந்து சில காட்சிகளை மட்டுமே பயன் படுத்தினாராம். மேலும் எந்தக் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பதிலும் தாமே முடிவு செய்துள்ளார். இந்நிலையில் முழு படத்தையும் முடித்துப் போட்டுப் பார்த்தபோது விக்ரமுக் கும் அவரது மகன் துருவுக்கும் முழுதிருப்தி ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
படம் தாம் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்ற வருத்தத் தில், 'இனி சினிமாவே வேண்டாம்' என்ற முடிவுடன் துருவ் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றதாகத் தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையடுத்து படத்தின் தயா ரிப்பாளரிடம் பேசியுள்ளார் விக்ரம். அதன் முடிவில் படத்தைக் கைவிடுவது எனத் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா முடிவு செய்துள் ளார். இவர் விக்ரமின் நெருங்கிய நண்பர். அதனால்தான் 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டாலும் பரவா யில்லை என்று இத்தகைய அதிரடி முடிவை எடுத்ததாகத் தகவல்.
"இந்தப் படத்துக்கு இளைய ராஜாவை ஒப்பந்தம் செய்யலாம் என்று பாலா கூறினார். ஆனால், விக்ரம் ஏற்கவில்லை. அதே போல் குறிப்பிட்ட ஒரு கதா பாத்திரத் துக்கு பாலா முக்கியத்துவம் அளித்ததும் விக்ரமுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இப்படி தொடக்கம் முதல் இறுதி வரை பல்வேறு கருத்து வேறு பாடுகள் நிலவின. அதனால்தான் இப்படியொரு நிலை ஏற்பட்டுள் ளது," என்று கோடம்பாக்க விவரப் புள்ளிகள் தெரிவித்துள்ளனர்.
கைவிடப்பட்ட ‘வர்மா’: பின்னணித் தகவல்கள்
10 Feb 2019 04:16

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்த திட்டம்: ஆய்வு

‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டலில் இலங்கையைச் சேர்ந்த ஈஷான் தாரக கூட்டகே, 30, தன் மனைவியைக் கொலை செய்து விட்டதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூர் எஃப்1 பந்தய போட்டிக்காக 'மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்' தயார் நிலையில் இருக்கிறது.

உடல் கட்டோடு 59 வயதில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் அருண் ரொசியா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

ஜி20 உச்சநிலை மாநாடு: பிரதமர் லீ புதுடெல்லி பயணம்

இசைக் கலைஞர் சுபாஷ் நாயருக்கு ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை

அதிபர் தேர்தல் நாளன்று வீடு புகுந்து திருடிய ஆடவர் கைது.

சமுதாயத்தில் தடம் பதித்த கோ சாரங்கபாணி, வி.டி. அரசு போன்ற தலைவர்கள் குறித்து திரு தர்மனின் கருத்து.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!