இரட்டை வேடங்களில் நடிக்கும் தனுஷ்

இரட்டை வேடங்களில் நடிக்கும் தனுஷ்

1 mins read
95155f2b-7a3a-4476-9410-2c7bbbcb52a0
-

'அசுரன்' படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. ஏற்கெனவே 'கொடி'யில் அவர் இரட்டை வேடங்களை ஏற்றிருந்தார். இந்நிலையில் ஜானு தயா ரிப்பில் உருவாகும் 'அசுரன்' படத்திலும் தனுஷை இரட்டை வேடத்தில் நடிக்கவைக்க முடிவு செய்துள்ளாராம் வெற்றிமாறன். இம்முறை பூமணி எழுதியுள்ள 'வெக்கை' என்ற நாவலைப் படமாக்குகிறார் வெற்றிமாறன். கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம். மேலும் நடிகர் கருணாஸின் மகன் கென், இயக்குநர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.