​நல்லதொரு கதைக்காக காத்திருக்கும் ரோஷன்

பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக் குள் நுழைந்த சமயத்தில்தான் சினிமா வாய்ப்பு தேடி வந்ததாகச் சொல்கிறார் இளம் நாயகன் ரோஷன். ‘ஒரு அடார் லவ்’ என்ற தலைப்பில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி உள்ள படத்தில் இவர்தான் கதாநாயகன்.
நான்கைந்து நண்பர்களில் ஒருவராக நடித்துள்ள இவருக்கு, தொடக்கத்தில் அதிக காட்சிகள் ஒதுக்கப்படவில்லையாம். ஆனால் இவரும் பிரியா வாரியரும் கண் களால் காதலைப் பரிமாறிக் கொள்ளும் காட்சி இணையத்தில் வெளியானதும், நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாம்.
“நடிக்க வந்த போது நான் பிரபலமாகவில்லை. இப்போதோ நின்று பேசக்கூட நேரம் இல்லை. பிறகு எப்படி கல்லூரிக்குப் போவது?
“படிப்பைக் கைவிட்டுள்ளேன். எனினும் தொலைதூர கல்வித் திட்டத்தில் சேர்ந்து படிக்க விருப் பம் உள்ளது. இந்தப் படம் வெளி யான பிறகு அந்த வேலையைத் தான் முதலில் செய்வேன்,” என்கி றார் ரோஷன்.
பிரியாவை முதன்முதலாக படப்பிடிப்பில் தான் சந்தித்ததாகச் சொல்பவர், பிரியாவும் தாமும் முன்பே நண்பர்கள் என்பது தவறான தகவல் என்கிறார்.
“பலர் இப்படித்தான் நினைக்கி றார்கள். அது தவறு. எனினும் இந்தப் படம் எங்களை நல்ல நண்பர்களாக மாற்றியுள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளி யான ‘கண்சிமிட்டல்’ காணொளிக் காட்சி தான் நாங் கள் பல வருட நண்பர்கள் என பலரையும் நினைக்க வைத்துள் ளது,” என்று சிரிக்கிறார் ரோஷன்.
தமிழில் நடிக்க வேண்டும் என்று விரும்பும் இவர், தற்போது இளம் இயக்குநர்களுடன் கதை கேட்டு வருகிறாராம். இன்னும் நல்ல கதை அமையவில்லையாம்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்