ரஜினி மகள் திருமணம்: ரஹ்மான் வாழ்த்து

நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவின் திருமணத்தை யொட்டி ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இசை யமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் டுவிட்டர் தளத்தில் தமது வாழ்த்தைப் பதிவிட்டுள்ளார்.
சவுந்தர்யாவுக்கும் தொழிலதி பர் விசாகனுக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது. முன்னதாக நடந்த திருமண வரவேற்பில் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில் டுவிட்டர் தளத் தில் சவுந்தர்யா ரஜினிகாந்தின் திருமண வரவேற்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதி விட்டுள்ள ரஹ்மான், 'திருமண வாழ்த்துக்கள்' என தமிழில் குறிப்பிட்டுள்ளார்.
சவுந்தர்யாவை மணக்க உள்ள விசாகன் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். 'வஞ்சகர் உலகம்' எனும் படத்தில் நடித்தும் உள்ளார்.

சவுந்தர்யாவைப் போலவே இவரது முதல் திருமணமும் விவாகரத்தில் முடிந்துள்ளது. இவரது முதல் மனைவி கனிகா, பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
வருண் மணியன் முன்பு நடிகை திரிஷாவை திருமணம் செய்வதாக இருந்தார். சில கார ணங்களால் அத்திருமணம் தடை படவே, தற்போது கனிகாவை கரம்பிடித்துள்ளார்.
இன்று நடைபெற உள்ள சவுந் தர்யா, விசாகன் திருமணத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், திரையுலகப் புள்ளி கள் பலரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து சென்னையில் உள்ள ரஜினி வீட்டுக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.

முன்னதாக தனது மகளின் திருமணத்துக்கான அழைப் பிதழை நேற்று முன்தினம் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு வழங்கி னார் ரஜினிகாந்த்.
தமிழக அரசியல் களம் பரபரப் பாக உள்ள நிலையில், இந்தத் திருமண வைபவத்தில் அரசியல் பிரமுகர்கள் ஒருவரையொருவர் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!