முக்கிய காட்சிக்காக மொட்டை போட்டு நடித்த அதர்வா

பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனா லும் பரவாயில்லை என முடிவெடுத்து மொட்டை அடித்து ஒரு படத்தில் நடித்துள்ளார் அதர்வா. அவரது இந்த அர்ப்பணிப்புடன் கூடிய செயல் பாட்டை பலரும் பாராட்டியுள்ளனர்.
ஆர்.கண்ணன் இயக்கும் புதிய படம் ‘பூமராங்’. இதில் அதர்வா தான் நாயகன். இந்தப் படத்திற்காகத்தான் மொட்டை போட்டுக்கொண்டாராம். 
இதில் அதர்வா ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், இந் துஜா, உபென் படேல்,  சுஹாசினி, ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள் ளனர்.
படத்தில் இடம்பெறும் ஒரு முக் கிய காட்சிக்காக மொட்டை அடிக்க வேண்டும் என்று அதர்வாவிடம் கேட்டுக்கொண்டாராம் கண்ணன். அவ்வாறு செய்தால் அடுத்தடுத்த படங்களில் நடிப்பது தாமதமாகும் என்பதால் மிகுந்த தயக்கத்துடன் தான் அதர்வாவிடம் இந்த கோரிக் கையை முன்வைத்தாராம் கண்ணன்.
ஆனால் எந்தக் காட்சிக்காக இப்படிச் செய்யவேண்டும் என்பதற் கான சூழலை கேட்டறிந்திருக்கிறார் அதர்வா. அதன்பிறகு அக்காட்சியின் முக்கியத்துவம் கருதி மொட்டை அடிக்க உடனடியாக சம்மதித்தாராம்.
‘பூமராங்’ அனேகமாக மார்ச் முதல் தேதி வெளியாகக்கூடும். இதுகுறித்து இயக்குநர் கண்ணன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள் ளார்.
தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து பட வெளியீட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
‘பூமராங்’ படத்தை அடுத்து ‘குருதி ஆட்டம்’ படத்தில் நடித்து வருகிறார் அதர்வா. ‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீகணேஷ் இயக்கிவரும் இந்தப் படத்தில் அதர்வா ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார்.
“இன்றைய தேதியில் ஒரு திரைப் படத்தை தயாரித்து வெளியிடுவதென் பது சாதாரண விஷயம் அல்ல. இதை நன்கு உணர்ந்தபிறகும் இந்தப் படத்தை இயக்குவதுடன் தயாரிக்கவும் செய்துள்ளேன்.
“காரணம் என் மீது எனக்கு எந்த ளவு நம்பிக்கை இருக்கிறதோ, அதே போல் அதர்வா மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். அவர் இயக்குநர்களுக்கான நாயகன். அதை ‘பூமராங்’ மூலம் மீண்டும் நிரூபிப்பார்,” என்கிறார் கண்ணன்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்