கபடியை காதலிக்கும் ‌ஷீலா

‘டுலெட்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி இருக்கிறார் ‌ஷீலா ராஜ்குமார். ஏற்கெனவே தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான். 
எனினும் வெள்ளித்திரை தனக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் முக்கியத் துவம் பெற்றுத்தரும் என்று நம்புகிறாராம் ‌ஷீலா.
விமர்சகர்களின் பாராட்டுகளுடன் சேர்த்து, இந்திய தேசிய திரைப்பட விரு தையும் பெற்றுள்ளது ‘டுலெட்’. வாட கைக்கு வீடு தேடி அலையும் ஒரு சாமா னியனின் அவலநிலையை சித்திரிக்கும் கதையைக் களமாகக் கொண்ட படம் இது.
சாதி, மத பேதங்கள் தமிழ்ச் சமூகத்தில் எத்த கைய தாக்கத்தைக் கொண்டுள்ளது என்ப தையும் திரைத்துறை யைச் சார்ந்த ஒருவ ருக்கு வீடு தர மறுக் கும் சமூகம் குறித்தும் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் இப்படம் விவரிக்கும். இப்படியொரு தரமான படத்தில் நடித்தது மகிழ்ச்சி தருவதாகச் சொல்கிறார் ‌ஷீலா.
“கோடிக்கணக் கில் முதலீடு செய்து வணிகச் சினி மாவை உருவாக்கச் சொன்னபோது அதை மறுத்து, சொந்த முதலீட்டில் தமக்குச் சரியெனத் தோன்றிய, நம்பிய, தாம் விரும்பிய உலகச் சினிமா வைத் தந்துள் ளார் ‘டுலெட்’ இயக்குநர் செழியன்.
“வருங்காலம் அவரை சத்யஜித் ரே, ரித்விக் கட்டக், ஜி.அரவிந்தன், அடூர் கோபால கிருஷ்ணன் போன்ற தரமான படைப்பாளிகளின் வரிசையில் வைத்துக்கொண்டாடும்,” என்கிறார் ‌ஷீலா.
பள்ளியில் படிக்கும்போதே இவர் அசத்தலாக நடிப்பாராம். பரிசு, பாராட்டுகள் குவிந்ததால் நடிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. வீடு முழுவதும் இவர் பெற்ற பரிசுக் கோப்பைகள் நிறைந்திருக்குமாம்.
“தமிழில் ‘அழகிய தமிழ் மகள்’ தொலைக்காட்சித் தொடரில் இருந்து விலகிய பிறகும் நான் அதில் ஏற்று நடித்த ‘பூங்கொடி’ கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் அளித்த அங்கீகாரத்தைக் கண்டு நெகிழ்ந்துபோனேன். 
“ஒரு முறை கேரளாவில் படப்பிடிப்பு நடந்த போது சில பெண்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது சில காரணங்களால் அந்தத் தொடரில் இருந்து விலகியிருந்தாலும் அதன் தாக்கம் என்னை விட்டு இன்னும் அகலவில்லை. சின்னத் திரைக்கு வரும் முன்பே செழியன் தயாரிப்பில் ‘டுலெட்’ படத்தில் நடித்து முடித்திருந்தேன். சினிமா எனக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது,” என்கிறார் ‌ஷீலா.
இந்த இளம் நாயகிக்கு கபடி விளையாட்டு என்றால் ரொம்பப் பிடிக்குமாம். சின்னத்திரை தொடர்களில் நடித்தபோது கபடி விளையாடு வது போன்ற சில காட்சிகளில் நடித்துள்ளார்.
“நான் இயல்பாக, திறமையாக அக்காட்சிகளில் நடித்திருப்பதாக பாராட்டுகள் குவிந்தன. உண்மையில் கபடி மீது எனக்கு தீராக் காதல் உண்டு. சிறு வயதில் ஒருமுறை கபடி விளையாடும்போது என் கையின் மணிக்கட்டு பிசகிவிட்டது. அதிலிருந்து கபடி விளையாடுவதே இல்லை. 
“என்னுள் இரு விஷயங்கள் ஊறிப் போனவை. ஒன்று கபடி, மற்றொன்று நடனம். இவை இரண்டுமே எனக்கு சின்னத்திரை தொடரில் கைகொடுத்தன. அப்படியொரு வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தயங்கமாட்டேன்.
“சின்னத்திரையோ வெள்ளித்திரையோ என்னைப் பொறுத்தவரை மனதிருப்தியே முக்கியம்,” என்கிறார் ‌ஷீலா ராஜ்குமார்.