சவுந்தர்யா மதிக்கும் மூன்று ஆண்கள்

‘வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு தாம் ஆசிர் வதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா.
தமது திருமணத்தை யொட்டி சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட் டுள்ளார். அதில் தமது வாழ்க்கையில் மூன்று முக்கியமான ஆண்கள் உள்ளதாக அவர் தெரி வித்துள்ளார்.
“என்னுடைய அன்பு அப்பா, தேவதை போன்ற மகன், இப்போது என்னுடைய விசாகன் ஆகியோர் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மூன்று ஆண்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார் சவுந்தர்யா.
இவருக்கும் தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும் ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் நடித்தவருமான விசாகனுக்கும் சென்னையில் திங்கட்கிழமையன்று திருமணம் நடைபெற்றது. 
அமெரிக்காவில் படித்த விசாகன், மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். திருமணத்துக்கு முன்பு கடந்த மூன்று நாட்களாக திருமண வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் இரு குடும்பங்களுக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
2019-02-13 06:01:00 +0800
‘பகவத்கீதையை நான் அவமதிக்கவில்லை’
பகவத்கீதை குறித்து தாம் அவதூறாக ஏதும் பேசவில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டார். இதுகுறித்து பிரபல தொலைக்காட்சி ஒளிவழி செய்தி ஒளிபரப்பி யது. பின்னர் இதுகுறித்து அத்தொலைக்காட்சி நிறுவனத்தின் சமூக வலைத்தளப் பக்கத்திலும் பதிவிடப்பட்டது.
இந்நிலையில் அப்பதிவில் இடம்பெற்ற வாச கங்களை கணினித் தொழில்நுட்பத்துடன் மாற்றி அமைத்து, பகவத்கீதை குறித்து சேதுபதி அவ தூறாகப் பேசியதுபோல் மர்மநபர்கள் சித்திரித் துள்ளனர். இதனால் சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள விஜய் சேதுபதி, பகவத்கீதை மட்டுமல்லாமல் எந்தவொரு புனிதநூல் குறித்தும் தாம் எப்பொ ழுதும் அவதூறாகப் பேசியதில்லை எனக் குறிப் பிட்டுள்ளார்.
“இனியும் அவ்வாறு பேசமாட்டேன். சில சமூக விரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்தச் சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்,” என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
அக்குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனமும் சேதுபதிக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளது.
இதற்கிடையே, விஜய் சேதுபதியின் அடுத்த படத்துக்கு ‘துக்ளக் தர்பார்’ என தலைப்பு வைத்துள்ளனர். இயக்குபவர் டில்லி பிரசாத்.
இவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் பணியாற்றியவர். அப் போது முதலே சேதுபதியுடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டதாம்.
“அப்போது நடிகர்களுக்கான தேர்வில் சேதுபதியும் கலந்துகொண்டார். அவரைத் தேர்வு செய்த குழுவில் நானும் ஒரு வன்,” என்கிறார் டில்லி பிரசாத்.
“இது மன்னர் ஆட்சி குறித்த கதை அல்ல. துக்ளக் மன்னரின் கதாபாத்திரத்தை தழுவி இக் கதை நாயகனின் குணாதிசயங்கள் வடிவமைக்கப்பட்டுள் ளன. 
“தலைப்புக்கேற்ப அரசியல் நையாண்டிக்கு குறைவிருக்காது. அதற்காக அரசியலை அதிகளவு திணிக்கமாட்டோம். என்னை இந்தப் படத்தில் அரசியல்வாதியாகவும் பார்க்கலாம்,” என்று தன் பங்குக்கு விவரிக்கிறார் விஜய் சேதுபதி.
இவரது அரசியல் அவதாரத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
2019-02-13 06:01:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்