தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்கிறார் கருணாகரன்

‘பொது நலன் கருதி’ திரைப்படத்தின் இயக்குநரும் இணைத் தயாரிப்பாள ரும் தன்மீது சாட்டியுள்ள குற்றச் சாட்டுகளில் உண்மையில்லை என நடிகர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் கந்துவட்டி கும்பலுக்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
‘பொது நலன் கருதி’ படத்தில் நடிக்க கருணாகரனுக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டது என்றும் அப்படத்தின் இசை வெளி யீட்டு விழா, விளம்பரப்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்த போது கருணாகரன் வரவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றும் அதன் விளைவாக கருணாகரன் தங்களைத் தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசி மிரட்டல் விடுத்ததாகவும் இப்பட இயக்குநரும் இணைத் தயாரிப்பாள ரும் போலிசில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில்,  ‘பொது நலன் கருதி’ படத்தில் உயிரைப் பணயம் வைத்து சில காட்சிகளில் நடித்ததாக கருணாகரன் கூறியுள்ளார்.
“நான் கந்துவட்டிக்காரர்களின் தொனியில் மிரட்டுவதாகக் கூறு கின்றனர். கந்துவட்டிக்காரர்களுடன் எனக்கு தொடர்புடையதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. நான் அப்படி வளரவில்லை, வளர்க்கப்படவும் இல்லை. நான் வேண்டுமென்றே படத்தின் இசை வெளியீட்டிற்கு வரவில்லை என்கிறார்கள். அதிலும் உண்மையில்லை,” எனக் கருணாகரன் கூறியுள்ளார்.