‘பாக்ஸர்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியான ரித்திகா

அருண் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் ‘குத்துச்சண்டை’ நாயகியை ஒப்பந்தம் செய்திருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
‘பாக்ஸர்’ படத்தில் அடுத்து நடிக்க உள்ளார் அருண் விஜய். இதற்கான பணிகள் துவங்கி உள்ளன. 
இந்நிலையில் ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் கோடம்பாக்கத்தின் கவனத்தை ஈர்த்த ரித்திகா சிங்கை தற்போது அருண் விஜய் ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். ரித்திகா, நிஜ வாழ்க்கையிலும் கிக் பாக்சிங்கில் தேர்ச்சி பெற்றவர். 
தனது முதல் படத்திலும் குத்துச் சண்டை வீரராகவே நடித்தார். இந்நிலையில் மீண்டும் குத்துச் சண்டையுடன் சம்பந்தப்பட்ட படத்தில் அவர் நடிக்க உள்ளார்.
 

Loading...
Load next