மீண்டும் அசத்தும் அனுஷ்கா

அனுஷ்கா ரசிகர்கள் மகிழும் வகையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. வேறொன்று மில்லை. இனி வழக்கம்போல் படங்களில் நடிக்க முடிவு செய்துவிட்டாராம். ‘பாகுபலி’க்குப் பிறகு அதிகமான படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலை யில் திடீரென வெளியே தலை காட்டுவதைக்கூட குறைத்துக் கொண்டார் அனுஷ்கா. எல்லா வற்றுக்கும் உடல் எடை அதி கரித்ததுதான் காரணம். 

‘இஞ்சி இடுப்பழகி’ படத் துக்காக எடை கூடியவர் அதன் பிறகு தனது இயல்பான உடற் கட்டுக்குத் திரும்பவே இல்லை. எடை கூடிய அனுஷ்காவைப் பார்ப்பதற்கு ரசிகர்களும் விரும் பவில்லை.
இந்நிலையில் அவருக்குத் திருமணம் நடக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், அதுவும் நடந்தபாடில்லை. 

இந்நிலையில் மீண்டும் பழைய அனுஷ்காவாக மாறியுள் ளார். அவரது வாளிப்பான உடற்கட்டுடன்கூடிய புகைப் படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. 
அதைக் கண்டு ரசிகர்கள் அசந்து போயுள்ளனர். உலகளவில் பிரசித்தி பெற்ற வாழ்க்கை முறைப் பயிற்சியாளர் லூப் கொடினோ உதவியுடன் தன் உடல் எடையைக் குறைத் துள்ளார் அனுஷ்கா. அற்பு தமான, அழகான, எளிமையான, பணி வான, இனிமையான அனுஷ்கா ஷெட்டி திரும்பியிருப்பதாக லூப் கொடினோ தெரிவித்துள்ளார்.

“ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் புதிய பிரிவாக்கி, ஆரோக்கியத்தை மாற்றுவதற்கு எங்களிடம் திட்டமும் நோக்கமும் உள்ளது. உங்கள் அனைவருடைய ஆதரவும் ஆசீர்வாதமும் அன்பும் எங்க ளுக்குத் தேவை. கிடைக்குமா?” என்று கேட்டுள்ளார் லூப். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்