மயிரிழையில் உயிர் பிழைத்த ‘அட்டக்கத்தி’ தினேஷ்

மயிரிழையில் உயிர் பிழைத்திருப்பதாக சிலிர்ப்பு டன் சொல்கிறார் நடிகர் தினேஷ். 
இதென்ன புது பரபரப்பு? என்று கேட்பவர் களுக்கு, சென்னையில் நடந்த சம்பவத்தைக் கேட்டால் வியப்பாகவும் திகிலாகவும் இருக்கும். 
தற்போது ‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு’ என்ற வித்தியாசமான தலைப்பில் உருவாகும் படத்தில் நடித்து வரு கிறார் தினேஷ். இயக்குநர் பா. ரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கும் படம் இது. 
ஆனந்தி, ரித்விகா, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான் விஜய், வினோத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தனது நீலம் பட நிறுவனம் சார் பாக ரஞ்சித் தயாரிக்கும் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை அண்மையில் சென்னை யின் புறநகர்ப் பகுதியில் படமாக்கினர். 
இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட குறிப்பிட்ட ஒரு காட்சியில் வேகமாகச் செல்லும் லாரியில் தொங்கிக்கொண்டே தினேஷ் எதிரியுடன் சண்டைபோட வேண்டும். இந்தக் காட்சியை கேமரா குழு படமாக்கியபோது அனைவரும் லாரிக்குள் இருந்தனராம். 
“எனவே கேமராவும் படக்குழுவினரும் சாலையில் இருந்த பொதுமக்களுக்குத் தெரிய வில்லை. தினேஷ் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்ததால் நிஜமாகவே ஏதோ பிரச்சினை என்று கருதியுள்ளனர். 
இதுகுறித்து சிலர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனராம். இந்நிலையில் படப் பிடிப்பு நடந்த நெடுஞ்சாலை வழியே அதிரடிப் படை வீரர்கள் சென்றுள்ளனர். இரவு நேரத்தில் லாரியில் தொங்கியபடியே ஒருவர் செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வீரர்கள் உடனடியாக லாரியைச் சுற்றி வளைத்துள்ளனர். 
இதனால் ஒன்றும் புரியாமல் குழம்பியுள்ளார் தினேஷ். “உண்மையாகவே என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. திடீரென கமாண்டோ வீரர்கள் ஏன் வந்தனர்? என்று விழித்தேன். இப்படி ஒரு ஏற்பாடு இருப்பதாக இயக்குநர் நம்மிடம் சொல்லவில்லையே? என்று யோசித்தபோதுதான் என்னைச் சுற்றி நின்ற வீரர்களின் கைகளில் இருப்பது நிஜ மான துப்பாக்கி என்பது தெரிந்தது.