ஆர்யாவுக்குத் திருமணம் உறுதி

நடிகர் ஆர்யா, சாயிஷாவைத் திருமணம் செய்யப்போவதாக டுவிட்டரில் அறிவித்திருக்கிறார். “பெற்றோர், குடும்பத்தினர் ஆகியோரின் ஆசியுடன் எங்கள் வாழ்நாளின் மிக இனிய நாளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். வரும் மார்ச்சில் எங்களுக்குத் திருமணம்! எங்கள் பயணத்திற்காக உங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் நாங்கள் நாடுகிறோம்,” என்ற பொருளைக் கொண்ட ஆங்கில அறிவிப்பு ஒன்றுடன் திருமண ஜோடியைக் காட்டும் படத்தை ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அண்மையில் ‘கஜினிகாந்த்’ திரைப்படத்தில் நடித்தபோது இவ்விருவர் காதலில் விழுந்திருக்கலாம் என்று திரை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்